சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 255 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது இதனையொட்டி நெல்லை பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, முன்னாள் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆவுடையப்பன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ, கிரகம்பெல், ஜெயபாலன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், மாநில நிர்வாகி விஜிலாசத்தியானந்த், தூத்துக்குடி மேயர் ஜெகன் , நெல்லை துணை மேயர் ராஜூ, மாநகர பொறுப்பாளர் தினேஷ் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
அரசியல்
ஒண்டிவீரன் நினைவு தினம்: கனிமொழி தலைமையில் திமுகவினர் மரியாதை
🕒 20 ஆக., 2026, 07:48 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

